இயக்குனர் நெல்சனுக்கு இவ்வளவு மார்க்கெட்டா??  முன்னணி ஹீரோ ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர்கள் ஷாக்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தை இயக்கி மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார்.

 சம்பளம் உயர்வு :

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில், உருவாகி கடந்த ஆண்டு ரிலீஸான திரைப்படம் டாக்டர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன், தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை முடித்துள்ளார். டாக்டர் படத்திற்கு பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி விட்டாராம். இந்த அதிர்ச்சியை, தயாரிப்பாளர்கள் சமாளிப்பதற்குள், தற்போது இயக்குனர் நெல்சன் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார்.

பல முன்னணி நடிகர்கள்  இவர் இயக்கத்தில் நடிக்க போட்டி போடுவதால், தான் இயக்குனருக்கு  இவ்வளவு பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக, இயக்குனர் தனது சம்பளத்தை உயர்த்திய சம்பவம் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here