நடிகர் அஜித்தின் 61 வது படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாகவும்,இசையமைப்பாளராக அனிருத் இணைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்றாவது கூட்டணி:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், வருகிற பொங்கல் நேரத்தில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தல 61 படம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது பெயரிடப்படாத அஜித்தின் தனது அடுத்த படத்தில், மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தையும் போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும், இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் அப்டேட் குறித்து, ரசிகர்கள் பலத்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்