நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து, இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
டப்பிங் பணியில் டான்:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் ரிலீஸான படம் டாக்டர். அவருக்கு நாயகியாக நடித்திருந்த பிரியங்கா மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தின் காட்சிகளில் மிகவும் ஒன்றி போய் இருந்தனர். சிறந்த காமெடி திரைப்படமாக உருவான இப்படம் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸ் மூவி லிஸ்டில் இணைந்தது.
இந்த படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், இவருக்கு நாயகியாக பிரியங்கா மோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின், படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் டப்பிங் பணியில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்