ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், பிளீஸ் உதவி செய்யுங்கள் என பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரசால் முடங்கிய திரையுலகம்..!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையுலகம் முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் வேலை இழந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. இதுபோல் நடிகர் சங்கத்தில் உள்ள துணை நடிகர் நடிகைகள், நாடக நடிகர்களுக்கு உதவவும் நிதி வசூலிக்கப்படுகிறது. அதற்கு பல்வேறு திரைத்துறையினரும் நிதி கொடுத்து வருகின்றனர். இதுவரை ரூ.15 லட்சத்து 65 ஆயிரத்து 100 வசூலாகி உள்ளது.
குட்டி பத்மினி..!
நடிகர் சங்கம் தற்போது கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் நீங்கள் நால்வர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து, உங்களால் முடிந்த உதவியை நடிகர் சங்க அறக்கட்டளைக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |