தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளது. இதையடுத்து பிரதி வாரம் சனிக்கிழமை பெருமாளுக்கு வித விதமாக நெய்வேத்தியம் செய்து அவரின் அருளை முழுமையாக பெற சூப்பரான சிம்பிள் அடுப்பே தேவை இல்லாத பச்சரிசி பழ பஞ்சாமிர்தம் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
வாழைப்பழம் – 4
வெல்லம் – 1/4 கிலோ
ஏலக்காய் – 2
செய்முறை:
பச்சரிசியை நன்கு 1 மணிநேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் சிறிதும் தண்ணீர் இன்றி வடிகட்டி கொண்டு அதை வாழை பழம் நறுக்கி வைத்து உள்ள பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.
அதன் பின்னர் சீவி வைத்து உள்ள வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். தற்போது சுவையான பச்சரிசி பழ பஞ்சாமிர்தம் ரெடி. இதை இறைவனுக்கு படைத்து அவரின் ஆசியை பெறுங்கள். இனி வரும் பதிவில் மேலும் சில நெய்வேத்தியங்களின் செய்முறையை காண்போம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்