தனிமையில் வாடும் டிடி செய்யும் காரியத்தை பாருங்களேன்… கேப்சனை பார்த்து ஆறுதல் கூறிய ரசிகர்கள்!!!

0
பிறந்தநாளை கொண்டாட டிடி அவ்வளோ தூரம் போயிருக்காங்களா - கடல் கடந்து வெளியான colorful வீடியோ!!

புகழ் பெற்ற பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்சினி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தலை முடி அசைய, ஒரு பாடல் பின்னணி இசையாக ஒலிக்க ரீல்ஸ் செய்துள்ளார். மேலும் அதோடு ஒரு கேப்சனை பதிவிட்டு உள்ளார்.

விஜய் டிவியில் பல்வேறு பேமஸ் ஷோக்களை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்சினி. ஒரு காலத்தில் இவர் தொகுத்து வழங்கும் ஷோக்கள் அனைத்தும் ஹிட் தான் என்று நம்பும் அளவிற்கு புகழுடன் விளங்கினார். மேலும் இவரின் துள்ளான தமிழ் பேச்சு, உச்சரிப்பு என அனைத்தும் இவரை விரும்ப வைத்தது.

இந்நிலையில் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய சிறு வயது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். மேலும் இடையில் அவரின் உடல் நலம் வேறு பாதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் திருமண முறிவால் ஏற்பட்ட மனழுத்தாலும்  திரையை விட்டு விலகி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் திரைப்பக்கம் ஒரு சில நிகழ்ச்சிகள் மூலம் வர தொடங்கி உள்ளார். மேலும் இவர் சமீபத்தில் நயன்தாரா வைத்து செய்த ஷோ செம ஹிட்டானது. இதனால் மீண்டும் அவர் பழைய பார்க்குக்கு வந்து உள்ளதாக கூறி வருகின்றனர். மேலும் இவர் அவ்வப்போது  தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது முடி எல்லாம் காற்றில் பறக்க ஒரு பாடலின் வரிகள் பின்னணியாக இசையாக ஒரு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். மேலும் இவர் அதோடு சேர்த்து,தனிமையில் உள்ளதை பிரதிபலிக்கும் ஒரு கேப்சனை தலைப்பிட்டு உள்ளார். இந்த கேப்சன் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை தங்களின் கமெண்டுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here