முழுநீள கவுனில் பயங்கர மேக்கப்பில் போட்டோஷூட் செய்த அறந்தாங்கி நிஷா – அல்லுவிடுது போங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா இதுவரையிலும் இல்லாத விதமாக முழுநீள கவுனில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அறந்தாங்கி நிஷா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. இறுதி சுற்று வரை முன்னேறினார். அதன் பிறகு விஜய் டிவி அவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தது. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டார்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். விஜய் டிவி என்றாலே அது அறந்தாங்கி நிஷாவின் அட்டகாசங்கள் தான் நிறைந்திருக்கும். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் தந்து காமெடி திறமைகளை வெளிப்படுத்தி வந்த அறந்தாங்கி நிஷா அர்ச்சனா கால் எடுத்து வைத்த நாளில் இருந்தே டோட்டலாக மாறினார்.

அர்ச்சனா என்ன சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு என்று சுற்றி திரிந்தார். இதனை கமல் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தார். அந்த போல்டான நிஷா எங்கே போனார் என்று பலரும் கேள்வி கேட்க ஆரம்பிக்க கடைசியில் மக்களின் வெறுப்பிற்கு ஆளானார் நிஷா.

இந்நிலையில் தான் தற்போது தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார். தனது திறமைகளை மீண்டும் கொண்டு வந்துள்ளார். ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கென்று இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார். இப்பொழுது முதன்முறையாக முழுநீள கவுனில் பயங்கர மேக்கப் போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here