பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் லவ் ஃபெயிலியர் டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் இணைவார்களா?? என்ற பதட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர். பிரஷாந்த் வேறு ஐஸ்வர்யாவை திருமணம் செய்தே தீருவேன் என்று உறுதியாக உள்ளார். இத்தனை நாட்கள் ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது வேற லெவெலில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா பிரஷாந்திடம் அனைத்து உண்மைகளை சொல்லியும் பிரஷாந்த் விடுவதாக இல்லை. கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். ஐஸ்வர்யாவை மதுரைக்கு அழைத்து செல்ல திட்டம் போட்டுள்ளனர்.
இவை அனைத்தையும் எப்படி கண்ணன் சமாளிக்க போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். தற்போதைய எபிசோடுகளில் கண்ணன் தான் ஹீரோவாக அந்த சீரியலில் வலம் வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகிறது.
ஏனெனில் கண்ணன் உண்மையான காதல் தோல்வி ரேஞ்சுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அதுவும் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் டயலாக்கிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீ டியோவை மிஸ் பண்ணாம பாருங்க.
View this post on Instagram