மிக பரபரப்பாக விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியல். அதில் பாக்கியாவின் மருமகளாக ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேசன். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணை பறிக்கும் பளபளவென மின்னும் உடையில் செம ஸ்டைலாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா கணேசன். இவரின் முதல் தமிழ் சீரியல் அறிமுகம் கேளடி கண்மணி என்ற சன் டிவி சீரியல் ஆகும். அதன் பிறகு சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
அந்த சீரியலில், கதாநாயகி பாக்கியாவின் மருமகள் ஜெனி என்ற ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த கதாபாத்திரத்தில் கூட்டு குடும்ப அன்பை விரும்பும் பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பளபளவென ஜொலிக்கும் நீல நிற உடையில் செம ஸ்டைலாக, கண்களால் வித்தியாசமான எக்ஸ்பிரசன் கொடுத்து உள்ளார். அவரின் இந்த கியூட் வீடியோவால் ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்