தமிழ் சினிமாவில் மூன்றாம் முறையாக மீண்டும் சிலம்பரசன், கௌவுதம் வாசுதேவ் மேனன், AR ரஹ்மான் கூட்டணி ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திற்காக இணையுள்ளது.
சில நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த சிம்பு, தற்போது உடல் எடையை குறைத்து ஹாண்ட்சம் பாய் தோற்றத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவருடைய நடிப்பில் தற்போது மாநாடு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சரவணா, கோவில், வல்லவன், குத்து, மன்மதன் போன்ற பட ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் AR ரஹ்மான் இசையில் வெளியான படங்கள் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவை.
அவ்வாறு இந்த மூவரின் கூட்டணியில் வெளிவந்த படங்களான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களும் ஹிட் அடித்தன. குறிப்பாக கதையோடு ஒன்றிய ரஹ்மானின் இசை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
தற்போது மீண்டும் சிலம்பரசன், கௌவுதம் வாசுதேவ் மேனன், AR ரஹ்மான் கூட்டணி ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திற்காக இணையுள்ளது. இதனுடைய படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்