விஜய் டிவியில் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல ட்விஸ்டுகளோடு ஒளிபரபரப்பட்டு வருகிறது. பல திருப்பங்கள் உடன் வரவுள்ள இன்றைய (20 ஜூலை 2021) எபிசோட் பற்றி இன்றைய பதிவில் காணலாம்.
பாரதி கண்ணம்மா:
மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் ஹேமா, கண்ணம்மாவின் குரலை கேட்டு கண் விழிக்கிறார். அனைவரும் ஹேமா உயிர் பிழைத்ததை நினைத்து சந்தோஷபட பாரதி தான் வளர்த்த மகள் தன்னை தேடவில்லையே என கவலை படுகிறார். பின்னர் ஹேமா கண்ணம்மாவிடம் நான் அமெரிக்கா செல்ல மாட்டேன் என்று கூறுகிறார்.
கண்ணம்மாவும் உன் விருப்பம் இல்லாமல் உன்னை யாரும் அமெரிக்கா கூட்டி செல்ல முடியாது என்று ஹேமாவை சமாதான படுத்துகிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த பாரதி ஹேமாவிடம் நாம் அமெரிக்கா செல்லப்போவதில்லை என கூறி அமெரிக்காவிற்கு செல்ல இருந்த டிக்கெட்டை ஹேமா கண் முன்னாடியே கிழித்து போடுகிறார்.
பாரதியின் இந்த செயலுக்கு வெண்பா தவிர அங்கு இருந்த அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர். இதை தொடர்ந்து பாரதியை தனியாக சந்தித்து, அவர் அம்மா சௌந்தர்யா பாரதிக்கு அறிவுரை கூறுகிறார். இதை பார்த்த வெண்பா கோபத்தில் சௌந்தர்யா சென்ற பிறகு பாரதியிடம் கண்ணம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததற்கு கோபப்படுகிறார்.
மேலும் வெண்பா, கண்ணம்மாவை பற்றி தவறாக கூறி, ஹேமாவிற்கு அம்மா தேவை எனவே யோசித்து நல்ல முடிவாக எடு என பாரதியிடம் நாசுக்காக தன்னை கல்யாணம் செய்துகொள்ள சொல்கிறார். இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசொட் முடிந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்