பூமியை கடக்க உள்ள தாஜ்மஹாலை விட 3 மடங்கு பெரிய எரிகல்… நாசா விஞ்ஞானிகள் தகவல்!!!

0

அண்டம் என்பது பல அழகான அதிசயங்கள் மற்றும் பல ஆபத்துகளை உள்ளடக்கியது. இவற்றை பற்றிய பல தகவல்களை நாம் அறிந்திருப்போம், படித்திருப்போம். அந்த வகையில் தற்போது நாசா விஞ்ஞானிகள் ஒரு தகவலை தெரிவித்து உள்ளனர். அதாவது வருகிற ஜூலை 25 ஆம் தேதி தாஜ்மஹாலை விட ஒரு பெரிய எரிகல் பூமியை கடக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

புவியில் ஏற்படும் பல பருவ நிலை மாற்றத்தின் காரணமாக பூமி மட்டும் அல்லாது பிரபஜத்தில் பல நிகழ்வுகள் நிகழ்கிறது. மேலும் அதில் சில நன்மை தரக்கூடியதாகவும், வேறு சில தீமை விளைவிப்பதாகவும் உள்ளது. இவை குறித்து பல நாடுகளை சேர்ந்த பல விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி மையம் NASA ஒரு செய்தியை தெரிவித்து உள்ளது.

அதாவது, தாஜ்மஹாலை விட அளவில் மூன்று மடங்கு பெரிய எரிகல் ஒன்று பூமிக்கு மிக அருகில் வருகிற ஜூலை 25 ஆம் தேதி கடக்க உள்ளதாக NASA விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் செல்லக்கூடிய இந்த ஏரிக்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என நம்புவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவ்வாறு அந்த எரிகல் தாக்கினால் பூமிக்கு குறிப்பிட்ட சேதம் ஏற்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here