சன் டிவியில் ப்ரைம் டைம்மில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் தொடர் அன்பே வா. இந்த சீரியலில் எலியும் பூனையுமாக இருப்பவர்கள் கதா நாயகி பூமிகா மற்றும் அவரது சித்தி. ஆனால் நிஜத்தில் இவர்கள் படு கிளோஸ். தற்போது இவர்கள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் போட்ட ஆட்டத்தை சித்தி வேடத்தில் நடிக்கும் ரேஷ்மா ஷேர் செய்துள்ளார்.
அன்பே வா, தினமும் சன் டிவி யில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாத்தொடர். ஒளிபரப்பாகும் சில நாட்களிலேயே இதில் வரும் ஹீரோ- ஹீரோயினுக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கியது. இதில் கதா நாயகி பூமிகா வேடத்தில் வரும் டெல்னா டேவிஸ் சினிமாவில் நடித்து விட்டு சின்னத்திரைக்கு வந்தவர். அதே போல இவரின் சித்தி கதா பாத்திரத்தில் வருபவர் ரேஷ்மா, இவரும் சினிமா, பிக் பாஸ் என ஒரு ரவுண்டு அடித்துவிட்டு சின்னத்திரையில் கால் பதித்தவர்.
சீரியலில் இவர்கள் இருவரும் எலியும் பூனையும்மாக அடித்து கொள்வார்கள். அதும் பூமிகா மாமியாருடன் சேர்ந்து ரேஷ்மா செய்யும் வேலைகள் பார்க்கும் நம்மகே கோபத்தை உண்டாகும். ஆனால் நாடகத்தில் மட்டுமே இவர்கள் இப்படி. நிஜத்தில்லோ படப்பிடிப்பின் போது சிறிய இடைவேளை இருந்தால் கூட ஆட்டம் பாட்டம் என இன்ஸ்டாவில் போட்டோ எடுத்து, ரீல்ஸ் செய்து கலக்கி வருகின்றனர். தற்போது ரேஷ்மா அப்படி ஒரு நகைச்சுவையான ரீல்ஸை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்