இன்று மாலை பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம்…! முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு!!

0

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் புதிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டமும், அதை தொடர்ந்து அமைச்சர்கள் குழு கூட்டமும் இன்று மாலை நடைபெறுகிறது. மேலும் இந்த கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் இத்தகைய மத்திய அமைச்சரவை கூட்டம் மிக முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசிகள் உற்பத்தி மற்றும் விநியோகம் இது போன்ற பல துறைகளின் முக்கிய பிரச்சனைகள் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில், பிரதி வாரம் புதன்கிழமை நடைபெறும் வாராந்திர மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா காரணமாக இன்று தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த பதவி ஏற்பு விழாவானது நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here