சன் டிவி சீரியலுக்கு தாவிய ‘ராஜா ராணி’ சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான சஞ்சீவ் தற்போது சன் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அதனை பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ்

குளிர் 100 டிகிரி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் சஞ்சீவ். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை.

ஓவியாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்ததாக பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கூறியிருப்பார். அதன் பிறகு தான் நீண்ட வருடங்களுக்கு தான் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். இவரின் நடிப்பு திறமை அனைவரையும் ஈர்த்தது.

முழுக்க முழுக்க Cowgirl ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி…!அந்த போட்டோவ நீங்களே பாருங்க!!!

செண்பாவை இவர் பார்த்து கொள்ளும் விதம் அனைவர்க்கும் பிடித்து போகவே செண்பா, கார்த்திக் ஜோடி ஹிட் அடித்தது. இந்த சீரியல் 3 வருடங்களாக செம ஹிட். அதன் பிறகு சஞ்சீவ் விஜய் டிவியில் காற்றின் மொழி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த சீரியல் அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.

அந்த சீரியலும் தற்போது முடிவடைந்த நிலையில் புதிதாக சன் டிவியில் ஒரு சீரியலில் களமிறங்கவுள்ளார். அதுவும் இரவு 7.30 க்கு அந்த சீரியல் வெளியாகவுள்ளது. இதனை கேட்ட சஞ்சீவ் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here