நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் போனி டைல் ஹேர் ஸ்டைலில் எடுக்கப்பட்ட இவரது கிளோஸ் அப் போட்டொ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி ரசிகர்களின் லைக்ஸையும் கமெண்ட்ஸையும் அள்ளி வருகிறது.
யாஷிகா ஆனந்த், தமிழ் திரையுலகில் 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர். பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். பின்னர் தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் இளைஞர்கள் மத்தியில் யாஷிகா பேமஸ் ஆகினார்.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே இவர் காட்டிய கவர்ச்சியால், நீங்கள் ஒரு வாரம் சேலை மட்டுமே அணிய வேண்டும் என யாஷிகாவிற்கு பிக் பாஸ் டாஸ்க் எல்லாம் கொடுத்தார். அந்த அளவுக்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் இவர் தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் கம்மி ஆனதால் போட்டோ ஷூட்டில் குதித்து உள்ளார். தற்போது கிளோஸ் அப்பில் எடுக்கப்பட்ட இவர் போட்டோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது