சென்னை ஐஐடியில் கேரள கவுரவ விரிவுரையாளர் மர்ம மரணம் …! மிகுந்த அச்சத்தில் மாணவர்கள் !!!

0

சென்னையில் உள்ள ஐஐடியின்  ஹாக்கி மைதானத்தில் கேரளாவைச் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணன் நாயரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு படித்து வரும் மாணவர்கள்  மிகுந்த அச்சத்தில்  உள்ளனர்.

நாட்டிலேயே முதன்மையான கல்வி நிறுவனமாக விளங்கும் ஐஐடியில் நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு  எலக்ட்ரிக்கல் பிரிவில்  திட்ட கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருபவர் கேரள மாநிலத்தை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர். இவர் அங்கு உள்ள விடுத்தியிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் திடீரென ஜூலை 1ம் தேதி  மாலை அளவில் மயமாகி உள்ளார். இந்நிலையில் இவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக ஐஐடி வளாகத்தின் ஹாக்கி மைதானத்திற்கு  அருகில்  இருப்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ந்து போன மாணவர்கள் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க, நிர்வாகம் இது குறித்து அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த உன்னிகிருஷ்ணன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதரீதியான தூண்டுதலால் தற்கொலை செய்த கேரள மாணவி  பாத்திமா லத்தீப் மற்றும் சாதி ரீதியான பாதிப்புக்குள்ளான பேராசிரியர் விபின் ராஜினாமா போன்ற ஐஐடியின் மர்மங்கள் அடங்குவதற்குள் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்நிலையில் கவுரவ விரிவுரையாளர் உன்னிகிருஷ்ணன் நாயர் மர்ம மரணம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இவரும் சாதி மற்றும் மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டு உள்ளாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து  தீ வைத்து எரித்து உள்ளாரா ? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இந்த மர்ம மரணங்கள் அங்கு பயிலும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here