பிக் பாஸ் ஜூலி, அவரோடு இன்ஸ்டா பக்கத்தில் தமிழ் குத்து பாடலுக்கு நடனமாடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு இவர் ரசிகர்கள் ‘இது கூட நல்லா தான் இருக்கு’ என்று இவரை சப்போர்ட் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். தன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் சக போட்டியாளர்களிடம் இவர் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு இவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களில் மக்களிடம் அதிகம் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர் என்றால் முதல் இடத்தில் வருபவர் ஜூலி.
ஆனால் வெளியே வந்த பிறகும் ஜூலி அதை பற்றியெல்லாம் கவலை படாமல் தொடர்ந்து தன்னுடைய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்தார். பின்னர் மக்களும் ‘அட.. விடுங்கப்பா.. அந்த பிள்ள ஏதோ தெரியாம பொய் சொல்லிருச்சு..’ என்று இவர் மீது உள்ள வெறுப்பை குறைத்து கொண்டனர். பின்னர் ஒரு சில படவாய்ப்புகளும் ஜூலிக்கு கிடைத்தன. தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வவ்போது தனது போட்டோ, வீடியோக்களை ஜூலி பகிர்வார். தற்போது “மஞ்ச தாலி போதும் உன் மடியில நான் வாரேன்” என்று குத்து பாட்டுக்கு நடனமாடி அந்த விடியோவை அப்லோட் செய்துள்ளார். இணையவாசிகள் அந்த விடீயோவிற்கு பாசிட்டிவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்