கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 6 வயது இந்திய சிறுவன்..  அப்படி என்ன செய்தார் தெரியுமா???

0

வாரணாசியை சேர்ந்த 6 வயதான அர்ஜுன் என்ற சிறுவன் மிக குறைந்த நேரத்தில் அதிக அம்புகளை இலக்கை நோக்கி ஏவி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கின்னஸ் என்பது ஓர் உயரிய அங்கீகாரம். சாகசம் புரிபவர்களுக்கு கிடைக்கும் கௌரவம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இப்புத்தகம் வெளியாகிறது. முதன்முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இப்புத்தகம் தகவல்களின் அவசியம் கருதி 37 உலக மொழிகளில் அச்சடிக்கப்படுகிறது.

தனிமனித சாதனைகள், அதிசய விலங்குகள், அதிசயப் பறவைகள், அதிசய இடங்கள், ஆபத்து நிறைந்த இடங்கள் போன்ற அரிய தகவல்களின் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.தற்போது இந்நூலில் உத்தர பிரதேசம் வாரணாசியை சேர்ந்த அர்ஜுன் என்ற சிறுவன் வெறும் 48.63 வினாடிகளில் 10 அம்புகளை எய்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஜோசப் மேக் கிரெயில் படைத்த சாதனையை முறியடித்துள்ளார். ஜோசப் மேக் கிரெயில், 1 நிமிடம்  0.03 வினாடியில் 10 அம்புகளை எய்தியுள்ளார்.கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற அர்ஜூனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here