தீபாவளிக்கு சூப்பர் பரிசு அளித்த ஜியோ நிறுவனம்.. முகேஷ் அம்பானி கொடுத்த பம்பர் ஆஃபர்!!

0
தீபாவளிக்கு சூப்பர் பரிசு அளித்த ஜியோ நிறுவனம்.. முகேஷ் அம்பானி கொடுத்த பம்பர் ஆஃபர்!!

இந்தியாவில் உள்ள சில முக்கிய இடங்களில் வருகிற தீபாவளி முதல் ஜியோ 5G சேவை கொண்டு வர போவதாக தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ஜியோ 5G சேவை:

உலக நாடுகளில் லேட்டஸ்ட் அப்டேட் ஆன 4ஜி நெட்வொர்க் சேவைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றன. இதனால் அதிகமான இணையதள வாசிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக 5ஜி அலைக்கற்றையின் சேவை விரைவில் வருவதற்காக அண்மையில் ஏலம் நடைபெற்றது. மேலும் 5ஜி அலைக்கற்றையை முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில் அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் தலைவர் முகேஷ் அம்பானி முக்கிய தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் பேசியதாவது, சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் முயற்சி செய்துள்ளோம். மேலும் ஜியோ 5ஜி அலைக்கற்றையின் சேவை வருகிற தீபாவளி முதல் அமுலுக்கு கொண்டு வரும் என தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம், அடுத்து ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவின் மீதமுள்ள நகரங்களில் தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும் என்று அம்பானி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here