தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அரசு புது முயற்சி – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

0

தமிழக முதல்வர் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்த நிலையில், தற்போது நான் முதல்வன் திட்டத்தின் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் உரை:

தமிழ்நாட்டில் தற்போது ஆட்சியை பிடித்து தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது மு க ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திமுக அரசு. அதன் வரிசையில் அண்மையில் மகளிருக்கு எளிதாக இலவச பேருந்துகளை கண்டு பிடிப்பதற்காக பிங்க் நிற பேருந்து அறிமுகப்படுத்தபட்டது. இதனை தொடர்ந்து இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது முதல்வர், மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு எளிதாக நல்ல வேலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அவர்களது தனித்திறனை அறிந்து அதற்கேற்றவாறு பயிற்சிகளை பரிந்துரைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்கில பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்து நான் முதல்வன் திட்டம் வளர்ச்சி அடைவதை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக ஸ்டாலின் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here