கொரோனாவால் அடித்த ஜாக்பாட் – 33 ஆண்டுகள் கழித்து 10ம் வகுப்பில் பாஸ் ஆன 51 வயது நபர்!!

0

ஐதரபாத்தில் 33 ஆண்டுகளாக 10ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனாவால் தேர்வாகி உள்ளார்.

51 வயது நபர் 10ம் வகுப்பில் பாஸ் ஆனார்..!

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களும் 10 ம்வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (வயது 51). இவர் கடந்த 1987ம் ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வை எழுத துவங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக தேர்வுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பத்து தேர்வு எழுதி வந்தார். பாஸ் ஆவதற்கு தேவையான 35 மார்க்குக்கு பதிலாக 33,34 என பெற்று தோல்வியையே தழுவி வந்தார்.

இதையடுத்து, இந்தாண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த போது அனைத்து பாடங்களையும் எழுத வேண்டும் என அதிகாரிகள் கூறி விட்டனர். அதனை ஏற்று அனைத்து பாடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தி விட்டு தேர்வு எழுதும் தேதிக்காக காத்திருந்தார்.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 96.04% மாணவர்கள் தேர்ச்சி!!

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் பாஸ் என தெலுங்கானா அரசு அறிவித்தது. இதனையடுத்து நூரூதினும் ஆல் பாஸ் ஆகிவிட்டார். இதனையடுத்து முதல்வர் சந்திரசேகரராவிற்கு நன்றி என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here