Monday, June 14, 2021

பொது இடங்களில் விலங்குகளை பலியிடக் கூடாது – பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஐகோர்ட் உத்தரவு!!

Must Read

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் காரணத்தால் முஸ்லீம்களின் பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் விலங்குகளை பலியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பக்ரீத் பண்டிகை:

ஆகஸ்ட் 1ம் தேதி நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹூக்கம் சிங் சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் பக்ரீத் பண்டிகைக்காக பல இடங்களில் ஒரே நேரத்தில் இருந்து ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் ஆயிரக்கணக்கில் கொண்டு வரப்பட்டு விதிகளை மீறி வதை செய்யப்படுகிறது. எனவே பொது இடங்களில் விலங்குகளை பலியிடவும், இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கவும் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் – பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது..!

இதனை விசாரித்த நீதிபதிகள், ஒரு நாட்டின் நன்னடத்தை மற்றும் பெருமை என்பது, அந்த நாட்டில் விலங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் தான் உள்ளதாக மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார் என தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகைக்கு பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடை செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் தொலைக்காட்சி நேயர்களுக்கு பெரும் அதிர்ச்சி – 2 சீரியல நிறுத்த போறாங்களாம்!!

இன்று முதல் விஜய் தொலைக்காட்சியில் அனைத்து சீரியல்களும் புதிய கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்திருந்த நிலையில் 2 சீரியல்கள் தற்காலிகமாக நிறுத்த போவதாக தகவல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -