ஆக்சிஜன் பற்றாக்குறை சோதனையின்போது 22 நோயாளிகள் உயிரிழந்ததாக புகார்

0

கொரோனா பரவல் நாடெங்கிலும் ஆட்டிப்படைத்து வர அதை காட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உ.பியில் ஒரு கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை:

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தான் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இப்பொழுது போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று சொல்ல வேண்டும். 4 லட்சத்தை கடந்து பரவிக்கொண்டிருந்த இந்த தொற்று தற்போது 1 லட்சம் வரை தான் பரவி வருகிறது. இதிலிருந்து மீண்டு வந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை தான் தற்போது தலைதூக்கி வருகிறது. இதனால் பலரும் உயிரிழக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என்பதை சோதனை செய்ய ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதியில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை காலி செய்ய சொல்லியுள்ளனர். ஆனால் யாரும் அதற்கு முன்வரவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனால் மறுபடியும் இந்த சூழ்நிலை ஏற்பட்டால் யார் எல்லாம் சமாளித்துக்கொள்வார்கள் என்பதை தெரிந்துகொள்ள 5 நிமிடங்கள் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியுள்ளனர். இதனால் இதனால் சிலரின் உடல் நீலநிறமாக மாறியதாகவும், ஆக்சிஜன் இல்லாமல் பிழைக்கமாட்டார்கள் என்றும் கண்டறியப்பட்டதாகவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here