சென்னை பட்ஜெட் 2024-25: பள்ளி மாணவர்களுக்கு குவியும் சலுகைகள்., மேயர் பிரியா மாஸ் அறிவிப்பு!!!

0
சென்னை பட்ஜெட் 2024-25: பள்ளி மாணவர்களுக்கு குவியும் சலுகைகள்., மேயர் பிரியா மாஸ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா அவர்கள், இன்று (பிப்.21) தாக்கல் செய்தார். அதில் சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களே.., இனி இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

அதன்படி சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ்,

  • LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,20,175 மாணவர்களுக்கு, தலா 2 செட் பள்ளிச் சீருடைகள் வழங்க ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 255 பள்ளிகளில் சிசிடிவி பொருத்த ரூ.7.64 கோடி நிதி ஒதுக்கீடு.
  • இராயப்பேட்டையில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 புதிய வகுப்பறைகள், புதிய இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து மேம்பாட்டு செலவுகளுக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு.
  • தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4, 5ஆம் வகுப்பு பயிலும் 24,700 மாணாக்கர்களை, சென்னை சுற்றி உள்ள சுற்றுலா தலங்களுக்கு “பள்ளிச் சுற்றுலா” அழைத்துச் செல்ல, ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
  • 5ஆம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு, ஒரு ஜோடி ஷு’ஸ், 2 ஜோடி ஷாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் அறிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here