“16 வயதினிலே” படத்தில் நடித்த டாக்டர் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?? புகைப்படம் உள்ளே!!!

0
பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1977 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் 16 வயதினிலே. இந்த படத்தில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில் ரஜினி மற்றும் கமலின் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் இந்த படம் சினிமா பயணத்தில் இவர்களுக்கு நல்ல ரீச்சை கொடுத்தது என்றே சொல்லலாம். இவர்களை தவிர இந்த படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் சத்யஜித் நடித்தது  நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
கர்நாடகாவை சேர்ந்த இவர் திரைப்படத்துறையில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதன் பின் சமீபத்தில் கன்னட படத்தை இயக்குவதாக பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் 16 வயதினிலே படத்தில் நடித்த டாக்டரா இது. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here