மக்களிடையே வெடித்த வன்முறை.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!!

0
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக பொதுமக்கள் இடையே வன்முறைகள் வெடித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் கொடி கம்பம் நிறுவப்பட்டு அதில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. மேலும் இந்த கொடியை ஏற்றி வைப்பதற்கு கிராம பஞ்சாயத்து இடம் அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் சிலர் தேசிய கொடிக்கு பதிலாக அனுமன் கொடியை ஏற்றியது தவறு என புகார் அளித்த நிலையில் கொடியை அவிழ்க்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால் கொடியை அகற்றும் போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம், பஜ்ரம் தளம் ஆகிய கட்சி தொண்டர்களிடையே வன்முறைகள் வெடித்தது. இதை தடுக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசின் பாதுகாப்பையும் மீறி அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here