1000 ஆண்டுகள் பழமையான முட்டை – அகழாய்வின்போது கண்டுபிடிப்பு

0

இஸ்ரேலில் 1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுகப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோழி முட்டை:

உலகம் முழுவதும் ஆங்காங்கே அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு புதையுண்ட பொருட்கள் கண்டறிவது வழக்கமான ஒன்று. தமிழகத்திலும் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் பொது பலகாலத்து பொருட்கள் கண்டறியப்பட்டது.தற்போது இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

யவ்னே நகரில் நடந்த அகழாய்வின்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த கோழி முட்டையை எடுத்துள்ளனர். முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்தார்கள் ஆய்வாளர்கள். இதனை வருடங்களாக முட்டை அழுகாமல் மற்றும் உடையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கழிவுநீர் தொட்டியிலிருந்து முட்டையுடன், பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது இது குறித்து நெட்டிசன்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here