ட்ரெண்டாகும் பிரபல தமிழ் இசைமைப்பாளரின் ஹாஷ்டேக் – கொண்டாடும் ரசிகர்கள்!!

0
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவரின் இசையை தாண்டி இவரின் குரலுக்கு மயங்கிய ரசிகர்களே ஏராளம். இவர் தன்னுடைய 42வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
1996 ஆம் ஆண்டு முதலே திரை துறையில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் யுவன். இவர் யாரடி நீ மோஹினி, மங்காத்தா, புதுப்பேட்டை போன்ற பல ஹிட் படங்களை தந்துள்ளார். தற்போது வலிமை படத்திற்கும் இவர் இசையமைக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் 42வது பிறந்தநாளை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். மேலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் இவரின் பிறந்த நாள் ஹாஷ் டேக்குகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
#HBDBelovedyuvan, #BGMKing, #U1forlife போன்ற ஹாஷ்டேக்குகள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன. இவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரை உலக பிரபலங்களும் யுவன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here