உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் லோவ்லினா…, தங்கம் வெல்லும் முனைப்பில் 4 இந்திய வீராங்கனைகள்!!

0
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் லோவ்லினா..., தங்கம் வெல்லும் முனைப்பில் 4 இந்திய வீராங்கனைகள்!!
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் லோவ்லினா..., தங்கம் வெல்லும் முனைப்பில் 4 இந்திய வீராங்கனைகள்!!

இந்தியாவின் லோவ்லினா, சவீட்டி பூரா, நீத்து மற்றும் நிகாத் ஜரீன் ஆகியோர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.

உலக குத்துச்சண்டை:

மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான லோவ்லினா போர்கோஹைன் அரையிறுதி போட்டியில், சீனாவின் லி குயானை எதிர்த்து போட்டியிட்டார். இதில், லோவ்லினா ஒரு செட்டை மட்டும் இழந்து, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, நடைபெற்ற 81 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதியில், இந்தியாவின் சவீட்டி பூரா ஆஸ்திரேலியாவின் சூ-எம்மா கிரீன்ட்ரீயை எதிர்த்து கடுமையாக போட்டியிட்டார். இதில், சவீட்டி பூரா போராடி 4-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தினார். இதே போல, 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன் கொலம்பியாவின் இங்க்ரிட் வலென்சியாவுக்கு எதிரான போட்டியில் 5-0 என்ற செட் கணக்கில் வென்றார்.

சூர்யகுமார், சஞ்சு சாம்சன் இருவரும் உலக கோப்பைக்கான அணியில் வாய்ப்பா?? ராகுல் டிராவிட் போட்ட திட்டம்!!

மேலும், 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நீத்து கஜகஸ்தானின் அலுவா பல்கிபெகோவாவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில், சற்று தடுமாறிய நீத்து 5-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தினார். இதன் மூலம், நேற்றைய போட்டிகளின் முடிவில், இந்தியாவை சேர்ந்த 4 வீராங்கனைகள் தங்கம் வெல்லுவதற்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here