தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் வளர்ச்சிக்கான மகளிர் நல வாரியம்., அரசாணை வெளியீடு!!!

0
தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் வளர்ச்சிக்கான மகளிர் நல வாரியம்., அரசாணை வெளியீடு!!!
தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் வளர்ச்சிக்கான மகளிர் நல வாரியம்., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் மகளிர்களுக்கான வளர்ச்சி பாதையை பல்வேறு நடவடிக்கைகளால் அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு சமூக நலன் அமைச்சர் பி.கீதா ஜீவன் மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான முழு விளக்கத்தையும் சட்டமன்றத்தில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தற்போது தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி விவாகரத்தான பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு தொடர்பான நல்ல நிலைகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த குழுவின் அதிகாரபூர்வ உறுப்பினர்களாக தி.மு.க. M.P. கனிமொழி, M.L.A. வரலட்சுமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உள்ளனர். இந்த வாரியத்திற்கு தலைவராக அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்குவார் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களா நீங்கள்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

மேலும் 3 ஆண்டுகள் மட்டும் பணிபுரிய கூடிய வகையில் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களாக சக்தி மசாலா நிறுவனர் சாந்தி துரைசாமி, ரேவதி அழகர்சாமி உள்ளிட்ட 14 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் குற்ற சம்பவங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதால் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here