ஐசிசி தரவரிசை வெளியீடு: மீண்டும் முதலிடத்தை அடைந்த T20 பவுலர்.., இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!

0
ஐசிசி தரவரிசை வெளியீடு: மீண்டும் முதலிடத்தை அடைந்த T20 பவுலர்.., இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!
ஐசிசி தரவரிசை வெளியீடு: மீண்டும் முதலிடத்தை அடைந்த T20 பவுலர்.., இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!

ஐசிசியானது, மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கு ஏற்ப தரவரிசை பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது.

ஐசிசி தரவரிசை:

ஐசிசியானது, கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ஏற்ப, தரவரிசை பட்டியலை புதுப்பித்துள்ளது. இதன்படி, கடந்த வாரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாடியது. இதில், இந்தியாவின் விராட் கோலி, அரைசதம் (54) விளாசியதன் மூலம், ஒருநாள் தொடரின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 7 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தரவரிசையில், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா 5 மற்றும் 8 வது இடங்களைப் பிடித்து டாப் 10 யில் உள்ளனர். ஒருநாள் போட்டிகளின் பவுலர்களுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்திலும், நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் மற்றும் இந்தியாவின் முகமது சிராஜ் 2 மற்றும் 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஒருநாள் தொடரின் ஆல்ரவுண்டர் தரவரிசையில், இந்தியா சார்பாக ஹர்திக் பாண்டியா மட்டுமே 13 வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களின் வளர்ச்சிக்கான மகளிர் நல வாரியம்., அரசாணை வெளியீடு!!!

டி20 போட்டிகளுக்கான தரவரிசையில், நம்பர் 1. பேட்டாராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் திகழ்கிறார். இதில், பவுலர்களுக்கான தரவரிசையில், 5 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்தை பெற்று அசத்தி உள்ளார். டெஸ்ட் தரவரிசையில், பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னே, பவுலிங்கில் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஆல்ரவுண்டரில் இந்தியாவின் ஜடேஜா முதலிடத்தை தக்க வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here