2 மணி நேரம் முடங்கிய வாட்ஸ்அப்.,பயனர்கள் தவிப்பு – மெட்டா நிர்வாகம் கொடுத்த அதிரடி விளக்கம்!!

0

வாட்ஸ்அப் நிறுவனத்தின் சேவை, 2 மணி நேரத்திற்கு மேலாக திடீரென நேற்று முடங்கியதை அடுத்து, இது குறித்த தெளிவான விளக்கம் ஒன்றை மெட்டா நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் விளக்கம் :

உலகெங்கும் உள்ள அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த செயலியில் நாள்தோறும் புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதியான நேற்று மதியம் 12:30 மணிக்கு இந்த வாட்ஸ்அப் திடீரென செயலிழந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின், மீண்டும் மதியம் 2:30 மணிக்கு இந்த சேவை சீரமைக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தக் கால இடைவெளிகளில், உலகெங்கும் உள்ள மில்லியன் கணக்கிற்கும் மேற்பட்ட மக்கள் ஆடியோ, வீடியோ மற்றும் கோப்புகளை பெற முடியாமல் சிரமப்பட்டனர். எந்த அழைப்புகளும் இல்லாமல், மொத்தமாக முடங்கியதால் பயனர்கள் ஸ்தம்பித்துப் போயினர். தொழில்நுட்ப குழு மூலம் இந்த சேவை விரைவில் மீட்டமைக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த தொழில்நுட்ப பிழை எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் மெட்டா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ரூபாய் நோட்டுகளில் இந்த படத்தையும் உடனே சேருங்க.,முதல்வர் அதிரடி கோரிக்கை – அரசுக்கு பரிந்துரை!!

தரவு மையங்களுக்கு இடையே உள்ள சேவையை ஒருங்கிணைக்கும் முக்கிய கட்டமைப்பு ஒன்றில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்தப் பிழை ஏற்பட்டிருக்கலாம் என, மெட்டா நிர்வாகத்தின் பொறியியல் குழு தெரிவித்துள்ளது. இருந்தாலும் இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here