பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க whatsapp சாட் போட் அறிமுகம்., பிப்.1 முதல் அமல்!!

0
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க whatsapp சாட் போட் அறிமுகம்., பிப்.1 முதல் அமல்!!
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க whatsapp சாட் போட் அறிமுகம்., பிப்.1 முதல் அமல்!!

வாட்ஸ் அப்பில் சேட் போட் என்ற செயற்கை நுண்ணறி உருவாக்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை தடுக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

அரசு அறிவிப்பு :

டெல்லியில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, இளம் பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்க வைக்கப்பட்டு, வெகு தூரம் ரோட்டில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இது போன்ற குற்றங்களை தடுப்பதற்காக, டெல்லி அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது வாட்ஸ் அப்பில், சாட் போட் என்று செயற்கை நுண்ணறிவை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் புகாரை தெரிவித்தால் இதற்கு, சாட் போட் உடனடியாக பதில் அளிக்கும் .

அது மட்டும் இல்லாமல், இது சார்ந்த விஷயம் உடனடியாக அரசு கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டு புகாராக பதிவு செய்யப்படும். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தடுக்கப்படும். இந்த அப்டேட்டை வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் whatsapp-யில் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here