ஆதார் வைத்திருப்போருக்கு ரூ.4.18 லட்சம் கடன் வழங்க முடிவு? வதந்திக்கு அரசு கொடுத்த விளக்கம்!!

0
ஆதார் வைத்திருப்போருக்கு ரூ.4.18 லட்சம் கடன் வழங்க முடிவு? வதந்திக்கு அரசு கொடுத்த விளக்கம்!!
ஆதார் வைத்திருப்போருக்கு ரூ.4.18 லட்சம் கடன் வழங்க முடிவு? வதந்திக்கு அரசு கொடுத்த விளக்கம்!!

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ரூபாய் 4.18 லட்சம் கடன் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளதாக, வெளியான வதந்திக்கு பத்திரிகை தகவல் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

வெளியான வதந்தி:

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் கார்டு தனிப்பெரும் அடையாளமாக திகழ்கிறது. 12 இலக்க தனித்துவ எண் கொண்ட இந்த ஆதார் கார்டு, அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதாரமாக கேட்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆதார் கார்டில், கடந்த சில நாட்களாக மோசடி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு, ரூபாய் 4.18 லட்சம் மத்திய அரசு கடன் வழங்குகிறது என ஒரு வதந்தி இணையத்தில் வெளியாகி வந்தது. இது குறித்து விளக்கம் அளித்த, பத்திரிக்கை தகவல் அமைப்பான (PIB), ஆதார் என்பது அரசின் ஒரு ஆவணம் மட்டுமே, இதை வைத்து யாருக்கும் கடன் வழங்க வாய்ப்பில்லை.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க whatsapp சாட் போட் அறிமுகம்., பிப்.1 முதல் அமல்!!

இணையத்தில் வெளியாகும் இதுபோன்ற மோசடிகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். வட மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் தொடர்ந்து நிகழ்வதால், இந்த விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுபோன்ற, செய்திகள் மொபைலில் வந்தால் உடனடியாக அவற்றை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here