வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் ஓய்வு – அனைத்து விதமான போட்டிக்கும் ‘குட் பை’!!

0

வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்க வீரர் சாமுவேல்ஸ், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இரு முறை அணி, ‘டுவென்டி-20’ உலக கோப்பை வெல்ல கை கொடுத்திருந்தார்.

டில்லி அணிக்காக விளையாடினார்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ், 39. இதுவரை 71 டெஸ்ட் (3917 ரன்), 207 ஒரு நாள் (5606) , 67 டுவென்டி-20 (1611) போட்டிகளில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை ‘டுவென்டி-20’ உலக கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். 2012ல் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான பைனலில் 78 ரன் விளாசி வெற்றிக்கு கை கொடுத்தார். இதைப்போல, 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக கோல்கட்டாவில் நடந்த பைனலில் 85 ரன்கள் சேர்த்து, சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். ஐ.பி.எல்., தொடரில் புனே, டில்லி அணிகளுக்காக விளையாடினார்.

கடைசியாக, டிசம்பர் 2018ல் வங்கதேச அணிக்கு எதிராக ஷெல்ஹட்டில் நடந்த ஒரு நாள் போட்டியில் விளையாடினர். இந்நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் இருந்து விடை பெற்றார். இதை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here