உடல் பருமனால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா?? ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை.., எளிய வழிமுறைகள் இதோ!!

0
உடல் பருமனால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா?? ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை.., எளிய வழிமுறைகள் இதோ!!
உடல் பருமனால் ரொம்ப கஷ்டப்படுறீங்களா?? ரொம்ப கஷ்டப்பட தேவையில்லை.., எளிய வழிமுறைகள் இதோ!!

தற்போதைய நவீன காலகட்டத்தில், உடல் எடை அதிகரிப்பு ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க கடினமான டயட், உணவை தவிர்ப்பது, பழங்களை மட்டும் சாப்பிடுவது, கடும் உடற்பயிற்சி என பல வழிகளில் முயற்சி செய்கின்றனர். இருப்பினும் இந்த முயற்சியின் பலனை சிலர் மட்டும்தான் அனுபவிக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஏனென்றால் கடுமையான டயட்டால் சிலர் விரக்தி அடைந்து மீண்டும் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவதால் உடல் எடை மேலும் அதிகரித்து விடுகிறது. இதனால் அவர்கள் அதிக மன உளைச்சலை சந்திக்கின்றனர். எனவே உடல் எடையை குறைக்க இவ்வளவு அவஸ்தை பட தேவையில்லை. எப்படி எளிமையான முறையில் உடல் எடையை குறைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(01.11.2022)-முழு விவரம் உள்ளே!

முதலில் இந்த மாதம் எவ்வளவு உடல் எடை குறைக்க வேண்டும் என டார்கெட் வைத்து கொள்ளுங்கள். வெயிட் செக் பண்ணும் மெஷின் வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. ஏனென்றால் அந்த மெசினை பார்க்கும் போது நமக்கு மோட்டிவேஷன் ஆக இருக்கும்.

  • மனதிற்கு அழுத்தம் கொடுக்காமல், அரை மணி walking மூலம் முதலில் உங்கள் உடற்பயிற்சியை தொடங்குங்கள்.
  • சர்க்கரை, மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவின் அளவை கொஞ்சம் கொஞ்சாமாக குறைத்து சாப்பிட வேண்டும். extreme லெவலுக்கு போக வேண்டாம்.
  • தினசரி சாப்பிடும் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள், முட்டை, சிக்கன், நிலக்கடலை, ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் சேர்க்காத வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டாலே போதும், உடை எடை நன்றாக குறையும்.
  • நாள்தோறும் கட்டாயம் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும், தூக்கமின்மையும் உடல் எடை கூடுவதர்க்கு ஒரு காரணம்.
  • உடற்பயிற்சி செய்வதற்கு முன் green tea குடித்தால், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் தினசரி தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் உங்களுக்கு walking செய்வது மிகவும் ஈஸியாகி விட்டால், அடுத்த கட்டமாக சின்ன சின்ன excercise-ஐ பண்ண ஆரம்பிக்கலாம். பின் ஜாக்கிங், சைக்ளிக் போகலாம்
  • சாப்பிடும் போது உணவை விழுங்க கூடாது, வாயில் போட்டு அசைத்து மென்று சாப்பிட வேண்டும்.
  • மெது மெதுவாக முயற்சி செய்தாலே கட்டாயம் உடல் எடையை குறைத்து விடலாம், அவசரப்பட்டு கடுமையான டயட்டை எடுத்துக்கொண்டு, அதை பாதியில் விட்டால் மேலும் உடல் எடையை அதிகரிக்கத்தான் வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here