T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த (ஜூன் 2) முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 31வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நேபால் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நேபால் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 43 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 ரன்களுக்கும் விளாசினர்.
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நேபால் அணி களமிறங்கியது. இந்த அணியில் களம் இறங்கிய வீரர்கள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் டெத் ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆனாலும் கடைசி பந்தில் நேபால் அணி வெற்றி பெற 2 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தில் குல்சன் ஜா ரன் அவுட் ஆனார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (15.06.2024)., முழு விவரம் உள்ளே…