வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கவில்லையா?? முக்கிய அறிவிப்பு இதோ!!!

0
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கவில்லையா?? முக்கிய அறிவிப்பு இதோ!!!
மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம் செய்தல் போன்ற பிழைகளை சரி செய்வதற்கான முகாம்களும் நடந்தது. இது ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் அட்டையுடன் எப்படி வாக்காளர் அட்டையை இணைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
  • முதலில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இதிலிருந்து வாக்காளர் ஹெல்ப்லைன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் தேவையான விவரங்களை பதிவிட்டு வாக்காளர் பதிவு விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • பின் தேர்தல் அங்கீகார படிவம் திரையிடப்படும். அதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கடைசியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை உள்ளிட வேண்டும்.
  • அதன் பின் வரும் OTP யை உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் இறுதியில் வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு மாநிலத்தை தேர்ந்தெடுத்து Proceed என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன் பின் ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், அங்கீகார இருப்பிட விவரம் போன்றவற்றை உள்ளிடவும் அனைத்து விபரங்களும் சரியாக இருந்தால் உங்களது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.
  • இதன் பின் உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வந்தவுடன் உங்களது வாக்காளர் அட்டை ஆதார் எண்ணுடன் இணைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here