வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் ஓட்டு போட முடியும்.., எப்படி தெரியுமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!!

0
வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் ஓட்டு போட முடியும்.., எப்படி தெரியுமா?? தேர்தல் அதிகாரி விளக்கம்!!!
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வரும் என மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர் இதனால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இப்படி இருக்கும் சூழலில் இப்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் அதிகாரி கூறியதாவது ஒருவர் வாக்களிக்க கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் இந்த அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை காண்பித்து ஓட்டு போடலாம். தற்போது இதை தொடர்ந்து  ஒரு வாக்காளர் வேறொரு சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் அதை வைத்து ஓட்டு போடலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here