இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்., ஜூன் 4ஆம் தேதி இல்லை., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகளும், ஒரே கட்டமாக எண்ணப்பட உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதற்கிடையில் அருணாச்சலப்பிரதேசம், ஆந்திரா, சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.

அதில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான அப்டேட்., தேர்ச்சி பெறுவதற்கு இது கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here