மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராகும் விவோ நிறுவனம் – கசிந்த தகவல்!!

0

ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சராக முதலில் சீன நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ திகழ்ந்தது. அதன் பின்பு கடந்த ஆண்டு ட்ரீம் 11 நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. தற்போது மீண்டும் விவோ ஸ்பான்சராக வர உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல்:

இந்தியாவில் ஆண்டு தோறும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் மிக சிறப்பான முறையில் நடைபெற்று வரும். இந்த தொடருக்காக ஸ்பான்சர்கள் குவிந்த வண்ணமாக இருப்பார்கள். காரணம் அந்த அளவிற்கு இந்த தொடர் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் பிரபல சீன நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ நிறுவனம் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக திகழ்ந்தது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா என்னும் வைரஸ் சீன நாட்டில் இருந்து பரவியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபில் வைத்து நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டில் சீன நிறுவன ஸ்பான்சர்கள் நிராகரிக்க படுவார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதனை ஏற்க பிசிசிஐ மறுத்தது. இதனை அடுத்து ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகிக்கொள்வதாக விவோ நிறுவனம் அறிவித்தது. இதனால் கடந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சராக ட்ரீம் 11 நிறுவனம் திகழ்ந்தது.

கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம் – வெளியான புகைப்படங்கள்!!

மீண்டும் டைட்டில் ஸ்பென்சர்:

தற்போது இந்த ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் வர ஆர்வம் காட்டி வருவதாக ஓர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு ஸ்பான்சராக இருப்பதற்கு ட்ரீம் 11 நிறுவனம் வெறும் 222 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. ஆனால் விவோ நிறுவனம் ஆண்டு தோறும் சுமார் 400 கோடி ரூபாய் வழங்கி வருமாம். எனவே இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here