விஜய், அஜித் பட வில்லனுக்கு விரைவில் டும் டும் டும் – இணையத்தில் கசிந்த புகைப்படம்!!

0

விஜய் மற்றும் அஜித் திரைப்படங்களில் வில்லனாக பதிவான ஹிந்தி நடிகருக்கு நிச்சயம் நடந்ததாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் தாஜ்மகால் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் பட வில்லன்

விஜய் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் துப்பாக்கி. மக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்க்கு மேலும் மார்க்கெட்டை தூக்கி விட்டது. அதிலும் ஒரே நேரத்தில் 15 குற்றவாளிகளை ஒரே நேரத்தில் சுட்டு கொல்லும் சீன் தான் ஹைலைட்.

இந்த படத்தில் வில்லனாக நடித்து வந்தவர் தான் வித்யுத் ஜம்வால். இவர் ஏற்கனவே பில்லா 2 படத்தில் நடித்து பிரபலமானார். ஆனால் துப்பாக்கி தான் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின் அஞ்சான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருபார்.

ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என கலக்கி வருகிறார் வித்யுத். இவர் நந்திதா என்ற ஆடை வடிவமைப்பாளரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் இவர்களுக்கு நிச்சயம் முடிவடைந்ததாகவும் சொல்லப்பட்டது. இப்படி இருக்க இவர்கள் இணைந்து தாஜ்மகால் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நந்திதா ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here