விரைவில் முதல்வர், துணைமுதல்வர், எம்.எல்.ஏகளுக்கு தடுப்பூசி – விஜயபாஸ்கர் தகவல்!!

0

இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, விரைவில் தமிழக முதல்வர், துணைமுதல்வர் மற்றும் எம்.எல்.ஏகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட போவதாக அறிவித்தார்.

கொரோனா தடுப்பூசி:

தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை கடந்த 16ம் தேதி அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் வைத்து துவக்கி வைத்தார். தற்போது இன்று தமிழகத்தில் 3வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. முதலாவதாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்பு விவாதம் தொடங்கப்பட்டது. அதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை சுமார் 1.33 லட்ச முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எம்.எல்.ஏகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவுள்ளது. இதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு ஓர் கடிதம் அனுப்பப்பட்டது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் விரைவில் தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகிலனிடம் தன்னை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்ல கட்டாயப்படுத்தும் ஹேமா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

மேலும் மத்திய அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் அடுத்தகட்டமாக பத்திரிகையாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தொடங்கப்பட்ட 200 மினி கிளினிக்கிற்கு விரைவில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்டுள்ளதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் தான் நியமனம் செய்வர் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தொடங்கப்பட்ட 872 அம்மா மினி கிளினிக் மூலம் இதுவரை 7,43,951 நோயாளிகள் பயன் பெற்றுள்ளார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here