கோபியுடன் ராதிகாவுக்கு நடக்க உள்ள திருமணம்?? அதிரடியாக வெளியாகும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள்!!

0
கோபியுடன் ராதிகாவுக்கு நடக்க உள்ள திருமணம்?? அதிரடியாக வெளியாகும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள்!!

பாக்கியலட்சுமி தொடரில், கோபி ராதிகாவுக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக, ராதிகா வீட்டார் போலீசில் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 விரைவில் திருமணம் :

பாக்கியலட்சுமி தொடரில், ராஜேஷ் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் ராதிகாவை, காவல் நிலையத்திற்கு வர சொல்கின்றனர். இதனால் மனம் வெறுத்த ராதிகா, கோபிக்கு போன் செய்கிறார். கோபி செல்லுக்கு புது நம்பரில் இருந்து கால் வருவதை பாக்கியா பார்க்கிறார். இதையடுத்து, இந்த நம்பரை எங்கேயோ பார்த்தது போன்ற ஞாபகம் இருப்பதால், அந்த நம்பரை பார்த்து குழம்பி விடுகிறார்.

இதனால் அவருக்கு மேலும், கோபி மீது சந்தேகம் வலுக்கிறது. இதையடுத்து, தனக்கு ராதிகா கால் செய்திருப்பதை பார்த்த கோபி சந்தோஷத்தில் அவருக்கு மீண்டும் கால் செய்கிறார். ஆனால் ராதிகா, கோபியை திட்டி நிம்மதியாக போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையை இப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டுக்குமாக அலைய விட்டு விட்டீர்களே என்று திட்டுகிறார். இது ஒருபுறமிருக்க ராதிகா அம்மா, ராதிகாவின் அண்ணனுக்கு போன் செய்து போலீஸ் ஸ்டேஷன் வர வைக்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் ராதிகாவை ராஜேஷ் கண்டபடி திட்டுகிறார். மேலும், கோபி என்ற ஒருவன் தன் வீட்டிற்கு வருவதால் தன் குழந்தைக்குப் பாதுகாப்பு இல்லை என போலீசிடம்  தெரிவிக்கிறார். ஆனால், இதனை மறுத்த ராதிகா வீட்டார், நாங்கள் அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க இருக்கிறோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால், குழப்பம் அடைந்த போலீசார் கோபியை போன் செய்து போலீஸ் ஸ்டேஷன் வர சொல்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here