வாணி போஜனுடன் மீண்டும் இணையும் இளம் நடிகர் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான், வாணி போஜன். இவர் தற்போது ஏற்கனவே தன்னுடன் நடித்த நடிகருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வாணி போஜன்

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் சாதிக்க என்று பல நடிகையர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் காலடி வைத்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான், நடிகை வாணி போஜன்.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் “தெய்வமகள்” என்ற சீரியலில் நாயகியாக நடித்து தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இதற்கு பிறகு கடந்த ஆண்டு நடிகர் அசோக் செல்வனுடன் “ஓ மை கடவுளே” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

‘அனிருத்,கீர்த்தி சுரேஷ் இடையே காதல் கிடையாது’ – கடுப்பான கீர்த்தியின் அப்பா!!

இந்த படத்தில் இவர் இரெண்டாவது கதாநாயகி தான் என்றாலும், இவருக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் இடையேயான காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படி இருந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகை வாணி போஜன் தமிழ் ரசிகர்கள் விரும்பும் முக்கியமான நடிகையாக மாறினார். இதற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இவரது கைவசம் பல படங்கள் உள்ளதாம். முன்னணி நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு திரைப்படத்திலும் இவர் ஒப்பந்தமாகியுள்ளாராம். இத்துடன் மீண்டும் அசோக் செல்வன் நடிக்க இருக்கும் புது படம் ஒன்றில் வாணி போஜன் கமிட்டாகியுள்ளார். மீண்டும் இந்த ஜோடி கூட்டு சேர்ந்து நடிக்க இருப்பதால் இருவரது ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here