தள்ளிப்போகும் ரஜினியின் ‘அண்ணாத்த’ – அஜித்தின் ‘வலிமை’ யுடன் மோதலா..!

0

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரஜினியின் அண்ணாத்த ஷுட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நேரத்தில் படத்தை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ரஜினியின் ‘அண்ணாத்த’..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் டைட்டில் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அண்ணாத்த படத்தை ஆகஸ்ட் மாதம் ரீலீஸ் செய்வதற்காக மும்முரமாக பல நகரங்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

கொரோனாவால் தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’..!

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெரியாததால் படத்தின் ரீலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

‘வலிமை’ படத்துடன் போட்டியா..!

ஒருவேளை அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசானால் ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாக இருக்கும் வலிமை படத்துடன் மோதும் என்கிறார்கள். முன்னதாக பொங்கல் அன்று விஸ்வாசம் ,பேட்ட ரீலீசாகி இரண்டு படமும் நல்ல வரவேற்பை பெற்றன. தீபாவளிக்கு இந்த இரண்டு படமும் ரீலீஸ் ஆகுமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here