தடுப்பூசி மையங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் : ஐகோர்ட் !!!

0

தடுப்பூசி மையங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் : ஐகோர்ட் !!!

மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை வேறு இடத்திற்கு மாற்ற சென்னை உயர் நீதி மன்றம் தற்போது அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை குறித்து அவவவ்போது உயர்நீதி மன்றம் தானாக வந்து விசாரிக்கிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கொரோன 3ம் அலை அபாயம் இருப்பதாக தகவல் வெளி வந்த வண்ணம் உள்ளது. அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஆனது மே மத்தியில் கொரோனா தமிழகத்தில் உச்சம் தொடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி மையங்கள் மருத்துவமனைகளில் அமைந்துள்ளது. எனவே மக்கள் தடுப்பூசி போட மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை இருக்கிறது. மருத்துவமனைகளில் கொரோன சிசிகிச்சை அளிப்பதால் மக்கள் தடுப்பூசி செலுத்த மருத்துவமனைக்கு செல்ல அஞ்சுகின்றனர். அதனால் மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அறிவுறுத்தியுள்ளது.

அதே போல் மாற்று திறனாளிகள் தடுப்பூசி போட்டு கொள்ள சிறப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதி மன்றம் பரிந்துரைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here