உக்ரைன் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது – 176 பேர் பலி?

0
உக்ரைன் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது - 176 பேர் பலி

உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமையினி விமான நிலையத்திலிருந்து சுமார் 170 பயணிகளுடன் டேக்-ஆஃப் ஆன உக்ரைன் நாட்டு விமானம், விபத்துக்கு உள்ளானது. இது குறித்த தகவலை ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்ததாக சொல்லப்படும் 176 பேரும் இந்த விபத்து காரணமாக உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான நிர்வாகத்தின் செய்திப்படி இத்தகவலை தெரிவித்துள்ளது ஈரான் அரசு. ஆனால் விமான நிர்வாகத்திடமிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடபடவில்லை.

ஈரான் அவசரகால சேவைகள் அமைப்பின் தலைவர் பிர்ஹோசைன் கோலிவாந்த், “விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்தது. அதனால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சம்பவ இடத்தில் 22 ஆம்புலன்ஸ், 4 பஸ் ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு ஹெலிகாப்ட்டர் உள்ளது” என்றவாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here