அந்தர் பல்டி அடித்த எலான் மஸ்க்.. ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து – காரணம் இதுதான்!!

0
எலான் மஸ்க் எடுத்த பரபரப்பு முடிவு.. அடுத்து அதைத்தான் வாங்க போறேன் - தீயாய் பரவும் சமூகவலைத்தள பதிவு!

கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்க ஒப்புக்கொண்ட எலான் மஸ்க் தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து:

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் CEO ஆன எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கடந்த ஏப்ரல் மாதம் வாங்குவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து ட்விட்டரின் முழு பங்கை எலான் மஸ்க் வாங்க ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த முடிவில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த புள்ளி விவரங்களை தனக்கு வழங்கும் படி எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்த நிலையில் அந்நிறுவனம் அந்த தகவல்களை சரியாக வழங்காத காரணத்தால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை முழுவதும் கைவிடுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இது உலகளவில் பங்கு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here